Sunday, November 30, 2014

வரலாற்றை திரிக்கும் பாஜக; ஆபத்தில் இந்திய வரலாறு.

வரலாறு .... உலகின், சமூகத்தின், தனி மனிதர்களின் இப்படி பலவற்றின்  கடந்த காலத்தை திரும்பி பார்க்க உதவும் பதிவுகள்.

http://1.bp.blogspot.com/-wPUY-6ec4xg/VH4wJbg1zQI/AAAAAAAANMc/o6tdq0NGVmM/s1600/word-history.jpgஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு சமூகத்துக்கும் தனிப்பட்ட வரலாறுகள் உண்டு, ஒரு நாட்டிற்கு அந்த நாட்டின் வரலாறு மூலம் தான் அந்த நாட்டின் கலாச்சாரங்கள் , வழிதோன்றல்கள், பண்பாடுகளை விளக்க முடியும். ஒவ்வொரு நாடும் தனக்கான வரலாற்று ஆய்வை தொடர்ந்து செய்து கொண்டே வருவதற்கு முக்கிய காரணம் இதுதான். அறிவியல் ஆய்வுகள் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு வரலாற்று ஆய்வும் முக்கியம். அறிவியலுக்கு எவ்வாறு கோட்பாடுகள் உள்ளனவோ அதுபோன்றே வரலாற்றுக்கு ஆதாரங்கள் முக்கியம். அனுமானங்கள் மற்றும் நம்பிக்கைகளை என்றுமே வரலாற்றை வடிவமைக்க எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

Thursday, June 19, 2014

ஆங்ரி பேர்ட்கள் சிட்டுக்குருவியை கொன்றுவிட்டன-கவிதை


காலச்சக்கரம் கண்டெடுத்த
கலியுக - மன்னிக்கவும்
கணினியுக மனிதனின் ஆறாம் விரல்,
 
இயல்பாய் மழையில் தலை மறைத்த கைகள்
இன்று மார்பை இறுக்கி அணைக்கின்றன
அலைபேசி அணையாமல் காக்க-
மனிதனின் ஒரு இயல்பையே மாற்றிவிட்டது இந்த மடு
 
அமெரிக்கவிற்கும் ஆண்டிபட்டிக்கும்
பாலம் கட்டியது,
ஆனால் அடுத்த வீட்டுக்காரனின்
முகம் பார்க்காமல் முடக்கியது

Saturday, March 29, 2014

முதல் ரசிகை


மாதவிடாய் மரித்தவுடன்
மகன் உன்னை நினைத்தவள்...

ஈர் ஐந்து மாதம்
தன் வயிற்று பாரமதை
பாசமென்று கொண்டவள்

அதுவரை ஆகாரம் அலட்சியமே
அருமை மகன் உனக்காக
அன்றிலிருந்து உண்டாள் பொறுப்பாக

எடுத்துவைக்கும்

நாகரீகத்தின் பரிணாமமா? / இழிநிலையின் உச்சமா?



மிக கண்ணியமானவர்களாக கருதப்படும் பெண்களின் இன்றைய நிலை இந்த நவீன உலகில் நாகரீகத்தின் பரிணாமமா அல்லது இழிநிலையின் உச்சமா?
பார்பதற்கு அர்த்தமில்லாத கேள்வியாக தெரிந்தாலும் , நள்ளிரவில் நைட் கிளப் வாசலில் போதையுடன் நிற்கும் பெண்களையும் , ரொம்ப சுலபமாக செக்ஸ்க்கு ஆண்களை அனுமதிக்கும் பெண்களையும் பார்க்கும்போது அப்படி இருந்து இருந்து முடியவில்லை.

ஆதி காலம் தொட்டே பெண்களுடைய உலகம் சுருக்கப்பட்டே தான் இருந்திருக்கிறது. வேட்டையாடிய மனிதன் காலத்திலிருந்து பெண் சமயலறைக்கு பணிக்கப்பட்டே இருந்தாள் என்பதுதான் நிதர்சனம்.என்னதான் ஒளவ்வையார், ஜான்சி ராணி போன்ற பெண்கள் இருந்தாலும், அப்படிப்பட்டவர்கள் சமூகத்தால் தள்ளியே பார்க்கப்பட்டார்கள் என்பதுதான் உண்மை. 

Sunday, January 26, 2014

அன்னையே...

அன்னையே ...
பத்து மாதம் என்னை இருட்டில் வைத்து
பாடு படுத்தினாய் என்று
கோவமாய் இருந்தேன் உன் மீது.
இப்போதல்லவோ புரிகிறது,
மதிகெட்ட இப்பூமியில் எம்மை விட மனமில்லாமல் தான்
மடியில் நீ சுமந்தாய் என.....

ஒரு தடவ காஷ்மீர் போயிட்டு வாங்க

காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஐ.நா. சபையில் வாக்கு கொடுத்த இந்திய இன்று வரை அதை செய்யாமல், அங்குள்ள மனிதர்களை மனிதர்களாக மதிக்காமல் நடத்திக்கொண்டு, இன்னும் 65வது குடியரசு தினம் கொண்டாட இந்த நாட்டிற்கு என்ன அருகதை இருக்கிறது.... Truly India is not a Secular Country...

பயணம் படத்தில் வரும் ஒரு உரையாடல்..

காஷ்மிரி: இது நாங்க நடத்துற போர், புனித போர்..
பயணி: போர்ல என்ன புனிதம்..
காஷ்மிரி: இருக்கு , அதனாலதான் இங்க இருக்குற பொண்ணுங்கல்லாம் இன்னும் பத்தரமா பாதுகாப்பா இருக்காங்க.. "உங்க ராணுவத்துகிட்டயும், போலிஸ்கிட்டயும் 3 நாள் ஒரு பொண்ணு இருந்தா என்ன ஆகும் விட்டுப்பார், அப்போ தெரியும்.."கம்ப்யூட்டர் படிச்சிட்டு லண்டன் , அமெரிக்கான்னு போறிங்களே , ஒரு தடவ காஷ்மீர் போயிட்டு வாங்க உங்க அரசாங்கம் அங்க என்ன பண்ணிட்டு இருக்குன்னு அப்போ தெரியும்""...# உண்மை சுடும்....

மதமும், மனிதர்களும்

ஒரு சில இந்துக்கள் , முஸ்லிம்கள், கிருஸ்தவர்கள், அறியாமையால் செய்யும் தவறுகளுக்காக, மொத்தமாக அந்த மதத்தையோ அந்த மதத்தை சார்ந்த அனைவரின் மீதோ காழ்ப்புணர்வு கொள்வது தவறு... பல சச்சரவுகள் இதனால் தான் விளைகிறது... மதத்தை படியுங்கள் அம்மதத்தை சார்ந்த மனிதர்களை படிக்காதீர்கள்.... நான் தவறு செய்தால் அதை என்னுடைய குணங்களுடனும் , அறியாமையுடனும் தான் தொடர்பு படுத்த வேண்டுமே தவிர என்னுடைய மதத்தின் மீது அல்ல...