Saturday, March 29, 2014

முதல் ரசிகை


மாதவிடாய் மரித்தவுடன்
மகன் உன்னை நினைத்தவள்...

ஈர் ஐந்து மாதம்
தன் வயிற்று பாரமதை
பாசமென்று கொண்டவள்

அதுவரை ஆகாரம் அலட்சியமே
அருமை மகன் உனக்காக
அன்றிலிருந்து உண்டாள் பொறுப்பாக

எடுத்துவைக்கும்
அடிகள்
இடியென இருப்பினும்
இன்முகமே கொண்டாள்

பிறக்கும் உனக்காக
பிழைப்போமா என்றறியாமல்
இறந்து பிறந்து
பிறப்பித்தால் உன்னை

கொண்ட வலியும்
பட்ட துயரும்
பாலகன் உன்னை கண்டதும்
பறந்து போனது

மங்கையான போதும்
மனவரை சென்றபோதும்
கட்டியவன் தொட்டபோதும்
பெற்ற இன்பத்தை விட-உன்னை
பெற்ற இன்பமே பெரிதானது

அம்மா என நீ அழைத்தபோது
அவள் பெற்ற ஆனந்தத்திற்கு அளவேது

உன் அழுகை சிரிப்பு
இரண்டையும் ரசித்த
முதல் ரசிகை

உனது “சீ” என்ற சொல்லும்
தீ என சுடும் அவளை

இன்றும் என்றும்
உன்னை குழந்தையாகவே பார்க்கும்
ஒரு குழந்தை அவள்

இதை அறியவில்லைஎனில்
மறந்து விடாதே....
“நாளை முதுமை உனக்கும் உண்டு”

No comments:

Post a Comment