Thursday, November 5, 2020

என் உயிர் உதிர்த்த சதை...


என் உதிரம்,
கருவாகி
உருவாகி
உயிராகி
உள்ளங்கையில் 
தவழ்கிறது...
உலகமாய்...

பொடியன்
04.11.20

Wednesday, July 18, 2018

பூமியும் மெதுவாய் சுற்றுதடி

பூமியும் மெதுவாய் சுற்றுதடி
ஈருடல் ஓருடல் ஆனதடி
இமயமும் சிறுமையாய் தோணுதடி
வீசும் காற்றும் வெக்கம் கொண்டு
வேகமாய் செல்கிறது நம்மை தீண்டி
முகில்களெல்லாம் முனகி திரிகின்றன

கருவறை கதகதப்பும்
கார்முகிலின் ஸ்பரிசமும்
என் மார்புக்கூடுகளில் ஊடுருவி செல்லுதே...

என் மார்புச்சூட்டில் முகம் புதைத்திருக்கும்
என் முழுநிலவே

காதல் என்றால் என்னவென்று தெரிய வேண்டுமா?
இதோ நாம் இறுக அனைத்து நிற்கும்
இந்நொடியில் உன் கண்களில் கசிகிறதே
அதுதான் காதல்

Saturday, February 13, 2016

நான் கண்ட மும்பை...

கேட்வே ஆப் இந்தியா, தாஜ் ஹோட்டல், மெரைன் ட்ரைவ், கடற்கரை, இன்னும் இது போன்ற வசீகர சுற்றுலாத்தளங்கள் இல்லாமல் இது மும்பையின் மற்றொரு முகம்.
ஆண்டாண்டு காலமாய் எளிய மனிதர்களின் வியர்வையினால் உருவான நகரத்தில் அவர்களை அவர்களின் விளிம்புநிலையிலேயே இருக்க வைத்து மேல்தட்டு மக்களுக்கான நகரம் மட்டும் உருவாகிறது. இதற்கு மும்பையும் விதிவிலக்கல்ல.
இது நான் கண்ட மும்பை...
15 வருடங்களுக்கு முன்பு சென்று வந்த என் தந்தை நான் மும்பை கிளம்புவதற்கு முன் சொன்னார் “ரயிலில் பார்த்து போ, பாக்கெட் பாத்திரம், அதிகமான கூட்டம் வரும், பப்ளிக் டாய்லெட் தான், வேண்டுமென்றே முகவரி மாற்றி சொல்வார்கள், இன்னும் இத்தியாதிகள்” அம்மா சொன்னார் “15 வருஷம் முன்னாடி நீங்க போனிங்க இப்போ எவ்வளவோ மாறியிருக்கும்” என்று.
15 வருடத்தில் வானுயர்ந்த Navi Mumbai கட்டிடங்களையும், மெட்ரோ, மோனோ ரயில்கள், மால்களையும் தவிர விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிய மற்ற எதுவுமே மாறியிருக்கவில்லை. மனிதம் செத்தால் தான் மாநகரம் உருவாக முடியும் போல. சென்னை எனக்கு அவ்வளவாக பிடிக்காது , இரைச்சல் , புன்சிரிப்பு கூட இல்லாத முறைத்த முகங்கள் இன்னும் பல. வன்புணரப்பட்ட சென்னையாக இருக்கிறது மும்பை. நகர வாசனை அறியாத இயற்கை விரும்பியின் எகத்தாள எழுத்து என்று உங்களுக்கு எண்ணம் ஏற்படலாம்.

Friday, April 10, 2015

உண்மையான பாரத ரத்னா,,,,,,,டீஸ்தா சேதல்வாட்!--அலசல் கட்டுரை

15/04/2015 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளிவந்த ஞாநியுடனான டீஸ்தா சேதல்வாட்டின் பேட்டியை குறித்த ஒரு அலசல் கட்டுரை... 

உண்மையான பாரத ரத்னா,,,,,,,டீஸ்தா சேதல்வாட்!

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள், வி.ஹெச்.பி... வகையறாக்களுக்கு, கேட்டதும் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய பெயர் டீஸ்தா. காரணம், குஜராத் கொடுமைகளுக்கு எதிராக ஓயாமல் போராடும் இவர், ஒரு குஜராத்தி இந்து!

குஜராத் கலவரத்தின் போது
பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக தொடர்ந்து பல வழக்குகளை
போட்டு நடத்தி வருபவர், அவற்றில் பலவற்றில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்துள்ளார். கலவரத்திற்கும் பின் ஏற்படுத்தப்பட்ட முகாம்களில் கூட நுழைய இவருக்கு கலெக்டர்கள் தடை விதித்தனர்.  குஜராத் கலவரத்தின் காரண கர்த்தாக்கள் இன்னும் சுதந்திரமாக உலவும் நிலையில்

Sunday, November 30, 2014

வரலாற்றை திரிக்கும் பாஜக; ஆபத்தில் இந்திய வரலாறு.

வரலாறு .... உலகின், சமூகத்தின், தனி மனிதர்களின் இப்படி பலவற்றின்  கடந்த காலத்தை திரும்பி பார்க்க உதவும் பதிவுகள்.

http://1.bp.blogspot.com/-wPUY-6ec4xg/VH4wJbg1zQI/AAAAAAAANMc/o6tdq0NGVmM/s1600/word-history.jpgஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு சமூகத்துக்கும் தனிப்பட்ட வரலாறுகள் உண்டு, ஒரு நாட்டிற்கு அந்த நாட்டின் வரலாறு மூலம் தான் அந்த நாட்டின் கலாச்சாரங்கள் , வழிதோன்றல்கள், பண்பாடுகளை விளக்க முடியும். ஒவ்வொரு நாடும் தனக்கான வரலாற்று ஆய்வை தொடர்ந்து செய்து கொண்டே வருவதற்கு முக்கிய காரணம் இதுதான். அறிவியல் ஆய்வுகள் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு வரலாற்று ஆய்வும் முக்கியம். அறிவியலுக்கு எவ்வாறு கோட்பாடுகள் உள்ளனவோ அதுபோன்றே வரலாற்றுக்கு ஆதாரங்கள் முக்கியம். அனுமானங்கள் மற்றும் நம்பிக்கைகளை என்றுமே வரலாற்றை வடிவமைக்க எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.