Saturday, March 29, 2014

நாகரீகத்தின் பரிணாமமா? / இழிநிலையின் உச்சமா?



மிக கண்ணியமானவர்களாக கருதப்படும் பெண்களின் இன்றைய நிலை இந்த நவீன உலகில் நாகரீகத்தின் பரிணாமமா அல்லது இழிநிலையின் உச்சமா?
பார்பதற்கு அர்த்தமில்லாத கேள்வியாக தெரிந்தாலும் , நள்ளிரவில் நைட் கிளப் வாசலில் போதையுடன் நிற்கும் பெண்களையும் , ரொம்ப சுலபமாக செக்ஸ்க்கு ஆண்களை அனுமதிக்கும் பெண்களையும் பார்க்கும்போது அப்படி இருந்து இருந்து முடியவில்லை.

ஆதி காலம் தொட்டே பெண்களுடைய உலகம் சுருக்கப்பட்டே தான் இருந்திருக்கிறது. வேட்டையாடிய மனிதன் காலத்திலிருந்து பெண் சமயலறைக்கு பணிக்கப்பட்டே இருந்தாள் என்பதுதான் நிதர்சனம்.என்னதான் ஒளவ்வையார், ஜான்சி ராணி போன்ற பெண்கள் இருந்தாலும், அப்படிப்பட்டவர்கள் சமூகத்தால் தள்ளியே பார்க்கப்பட்டார்கள் என்பதுதான் உண்மை. 


தமிழ் நாட்டை பொறுத்தவரை பாரதி அதையும் தாண்டி பெரியார் போன்றவர்களால் பெண்களுடைய மரியாதை கூடின என்றே சொல்ல வேண்டும். இவர்களுடைய முயற்சிகள் பெண்களுக்கான அங்கீகாரத்தையும் கண்ணியத்தையும் கொடுத்தது உண்மை. ஆனால் இதனால் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. பழமைவாதிகளின் மூளையை சலவை செய்வது அவ்வளவு எளிதானதாக இல்லை.

இந்தியா மட்டுமல்ல உலகளவில் பெண்கள் கிபி 160 லிருந்தே போகத்திர்க்காகவும், விலங்குகளை போல உணர்வற்றவர்களாகவுமே கருதப்பட்டனர், "ஒரு சில விதி விலக்கான நாடுகளை தவிர".

காலமாற்றத்தால் ஏற்பட்ட தேவைகளாலும், பண அவசியத்தாலும் பெண்கள் வெளியே வர அனுமதிக்கப்பட்டனர், இது ஒரு காலத்தின் கட்டயமேயன்றி சுதந்திரத்தின் வெளிப்பாடு அல்ல. இருந்தாலும் பெண் சுதந்திர விரும்பிகள் இதை வரவேற்றார்கள். இதுதான் முதல் தவறு, பெண்களுடைய வெளிப்பாடானது விழிப்புணர்ச்சியின் விளைவாக நடந்திருக்க வேண்டும், மாறாக காலத்தின் கட்டாயமாக மாறிப்போனதுதான் வருத்தமளிக்கிறது.

இவ்வாறு தவறான புரிதலுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெண்களுடைய வெளிப்பாடானது இன்று அடைந்திருக்கும் நிலை எவ்வாறு நாகரீகத்தின் பரிமாணமாக இருக்க முடியும்.?

பொறுப்பாக வேலைக்கு சென்று குடும்ப பாரத்தை சுமக்கும் பெண்களையும், சமூக போராட்டங்களை முன்னின்று நடத்தும் இக்கால பெண்களையும் பார்க்கும்போது ஒட்டுமொத்தமாக பெண்களின் சுதந்திரம் இழிநிலையில் போய்விட்டது என்று கூற இயலாது.

இன்று எத்தனையோ பெண்கள் நாகரீகத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிறார்கள், தொழில், நிர்வாகம், போன்றவற்றில் கொடிகட்டிப்பறக்கிறார்கள், அவர்களுடைய அடுத்த தலைமுறை சிறந்து விளங்க வாய்ப்புகள் ஏராளம். ஆனால் அடுத்த தலைமுறை இதே அளவிலான செயல்பாடுகளை உள் வாங்குகிறதா என்பதேன் என் கேள்வி.

சென்னை, நள்ளிரவு, நைட்கிளப் வாசலில் போதையுடன் பெண் ஒருத்தி நிற்கிறாள். Lodge, Pubs, Night Parties, Dating இப்படியான கலாச்சரங்களை காலத்தின் சாபங்களாக வாங்கி நிற்கிறோம். 


சுதந்திரத்தை தங்களுக்கான உரிமையாக இன்றைய தலைமுறை பெண்கள் சிந்திக்க தொடங்கிவிட்டார்கள் என்பது உண்மையில் சந்தோஷப்பட வேண்டிய விஷயம் தான், ஆனால் அதற்கு அவர்கள் வரைமுறை அளிக்காமல் இருப்பது நல்லதல்ல.

மேற்கூரிய காலசாபங்களை சுதந்திரத்திலோ , உரிமையிலோ சேர்ப்பது மடத்தனம். இது ஆணாதிக்கத்தின் குரலாக தோன்றலாம். ஆனால் இத்தகைய வரைமுறை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் தான்.எப்படி உடை அணிய வேண்டும் என்றுபெண்களுக்கு உபதேசிக்கும் நாம் எப்படி பார்க்க வேண்டும் என்று ஆண்களுக்கும் அறிவுறுத்தவேண்டும்,
சுருக்கமாக சொல்வதானால் பெண்களின் வெளிப்பாடு காலத்தின் தேவையின் கட்டாயத்தால் நிகழ்ந்தது முதல் தவறு, அதை ஆமோதித்தது இரண்டாவது தவறு. சுய விருப்பத்தின் பேரில் அது நிகழ்ந்திருக்க வேண்டும். வரைமுரைகளோடு.

இங்கு எந்த ஒரு ஆணும் இத்தகைய Dating கலாச்சார பெண்களை மனைவியாக்கி கொள்ள விரும்புவதில்லை என்பதே நிதர்சனம், நாளைய தலைமுறை இதில் தெளிவாக உள்ளதை பரவலாக பார்க்க முடிகிறது. பெண்களின் போக்கில் தான் ஒரு நாட்டின் சமுதாயத்தின் போக்கும். இதையறிந்து அவர்களின் கல்வியிலிருந்து அவர்களுக்கான பயிற்ச்சிகளை வழங்க வேண்டும்.

கார் விளம்பரத்தில் வரும் அரைகுறை ஆடையணிந்த பெண்ணை யாரும் சுதந்திரம் கொண்டவளாக பார்ப்பதில்லை, காமத்தின் ஊற்றுக்கண்ணாகவே பார்ப்பாகள்.  தனது சுதந்திரத்திற்கான அர்த்தத்தை பெண்கள் உணர வேண்டும். கண்டதையும் சுதந்திரம் என உள் வாங்கிக்கொள்வது, பெண்களுக்கு மட்டுமல்ல நாட்டிற்கே நல்லதல்ல,,,,

No comments:

Post a Comment